GDS ஊழியர்களுக்கு அவசரகால விடுப்பு(EMERGENCY LEAVE) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசரகால விடுப்பு 01.01.2019 முதல் அமலுக்கு வருகிறது.
1.அவசரகால விடுப்பினை ஒரு காலண்டர் ஆண்டில் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
2.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே அவசரகால விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.
3. அவசரகால விடுப்புகளுக்கு பதிலிகள் (SUBSTITUTE ) நியமிக்கப்படக் கூடாது. இரண்டு GDS ஊழியர்கள்(BPM- ABPM ) உள்ள அலுவலகங்களில் ஒருவர் விடுப்பு எடுத்தால் மற்றவருக்கு COMBINED DUTY போட வேண்டும். தனிநபர் அலுவலகம் எனில் பதிலி நியமிக்கலாம்.
4. இதனை அடுத்த ஆண்டு அவசர விடுப்பு கணக்கில் சேர்க்கவோ(Carry Forward ) அல்லது பணமாக்கி(Encashment) கொள்ளவோ முடியாது.
5. அவசரகால விடுப்பினை எடுப்பதற்கு BPM ஊழியர்கள் கோட்ட அலுவலகத்தின்(DO) அனுமதியையும் BPMதவிர்த்த மற்ற GDSஊழியர்கள் உட்கோட்ட அதிகாரி/முதுநிலை அஞ்சல் அதிகாரி/அஞ்சல் அதிகாரி அனுமதியையும் பெற வேண்டும்.
6.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் அவசர விடுப்பின் முன்பு அல்லது பின்பு இருப்பின் அவைகள் அவசரகால விடுப்பிலிருந்து கழிக்கப்படாது.
7.இரண்டு நாட்களுக்கு மேல் அவசர விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவர் விடுப்பு எடுத்த நாட்கள் அவருடைய Paid leaveலிருந்து கழிக்கப்படும். Paid Leave இல்லாத பட்சத்தில் Unauthorised Absent ஆக கருதப்பட்டு அவருக்கு TRCA வழங்கப்படாது.
8.அரை நாள் அவசரகால விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.
9.PUT-OFF DUTY உள்ள GDS ஊழியர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்படாது.
10. அவசரகால விடுப்பு அளிக்கும் அதிகாரிகள் அவசரகால விடுப்புகள் குறித்த தனிப்பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment